January 21, 2025
AP24228179954228-1726198302

கொழும்பு: இலங்கையில் சமீபத்தில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் அநுர குமாரா திசநாயக்க புதிய ஜனாதிபதியாக தேர்தவாகியுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் அநுராவின் கட்சி பேரும்பான்மையை பெறுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தியாவை காட்டிலும் இலங்கை தேர்தல் சற்று வித்தியாசமானது. அந்த வகையில் முதலில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடத்தப்படும். இதில் பெரும்பான்மையான வாக்குகள் பெறுபவர் புதிய ஜனாதிபாதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஆனால், அரசியலில் அவர் மட்டுமே தனித்த அதிகாரத்தை பெற்றிருக்க மாட்டார். அவர் மேற்கொள்ள விரும்பும் திருத்தங்களை செய்ய நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி அவசியம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக, இவருடைய தேசிய மக்கள் சக்தி கட்சி வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

எனவே, ஆட்சிக்கு வந்த பின்னர் உடனடியாக நாடாளுமன்றத்தை அவர் கலைத்து, புதிய தேர்தலுக்கு திட்டமிட்டார். அந்த வகையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

இதில் ஜனதா விமுக்தி பெரமுன, சமாகி ஜன பலவெகய, ஐக்கிய தேசியக் கட்சியை, புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன.

இதில் எப்படியாவது பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கட்சி முயன்று வருகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தை பொறுத்தவரை மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. இதில் 196 நேரடியாக மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மீதமுள்ள 29 தேசிய பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.

நாடு முழுவதும் மொத்தம் 160 மாவட்டங்கள் இருக்கின்றன. மாவட்டத்திற்கு ஒரு இடம் எனவும், 36 மாகாணங்களுக்கு தலா 4 இடங்கள் எனவும் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

மேற்குறிப்பிட்ட 29 தொகுதிகள் என்பது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இதில் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தொகுதிகளை பகிர்ந்தளிக்கும்.

இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சி வென்றதோ, அதே கட்சிதான் நாடாளுமன்ற தேர்தலில் வென்று பிரதமர் பதவியை பிடிக்கும். ஆனால் ஒரேயொரு முறை மட்டும் ஜனாதிபதி தேர்தலில் வேறு கட்சியும், நாடாளுமன்ற தேர்தலில் வேறு கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் முறையும், நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்கும் முறையும் வேறுபட்டிருக்கும் என பிபிசி கள ஆய்வு தெரிவித்திருக்கிறது.

அதாவது, நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த அளவில் ஒரு வாக்காளர் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். அதேபோல ஒரு கட்சியை தேர்வு செய்ய வேண்டும். இதல் 3 வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டு, கட்சியை தேர்வு செய்யாவிடில் அந்த வாக்கு செல்லாது.

அதேபோல 3க்கும் அதிகமான வேட்பாளர்களை தேர்வு செய்தாலும் அந்த வாக்கு செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி!

Halley Karthi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *