 
                கடந்த 2015 ஆம் ஆண்டில் நடந்த மத்திய வங்கி பத்திர மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்படுவார் என்று பிரதமர் ஹரினி அறிவித்துள்ளார்.
பிரசாரக்கூட்டம் ஒன்றினல் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“முன்னதாக 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கியின் பத்திர மோசடி தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தபோதும், அவரின் பதவி நிலை தண்டனையின்மை காரணமாக விசாரணைகளுக்கு அழைக்கப்படவில்லை.
அதேவேளை பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்ட நிலையிலேயே அவர் சிங்கப்பூர் நாட்டவரான அர்ஜூன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தார்.
எனினும் மத்திய வங்கி பத்திர மோசடியில் குற்றம் சுமத்தப்பட்ட அவர், ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் சிங்கப்பூர் சென்ற போதும் பின்னர் நாட்டுக்கு திரும்பவில்லை.
இதன் காரணமாக அவர் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டு வருகிறது இந்தநிலையில் தற்போது ரணிலுக்கு எதிரான முனைப்புக்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுத்து வருகிறது.

 
                             
                             
                             
                             
                            