February 4, 2025
Fort-train-station

தீபாவளியை பண்டிகையினை முன்னிட்டு ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று தொழிற்சங்க நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாது என அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறைகளை முறைப்படுத்துதல், சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் அன்றைய தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.

எவ்வாறாயினும், வேலை நிறுத்தத்துடன், முன்னறிவிப்பின்றி காங்கேசந்துறை புகையிரதம் பயணித்ததால், புகையிரத திணைக்களத்திற்கு கிட்டத்தட்ட 30 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக, புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *