 
                3 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகவுள்ளது.
அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன் உரிய கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் நாளை மறுதினமும் நாடளாவிய ரீதியில் 3130 கணக்கெடுப்பு நிலையங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி முன்னெடுக்கவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார குறிப்பிட்டார்.
இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், அந்த அறிக்கையின்படி இந்த நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 5878 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
                             
                             
                             
                             
                            