![Untitled-225](https://hellofm.net/wp-content/uploads/2024/08/Untitled-225.jpg)
ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கல, ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திமுதுகம பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது